இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI BRAWIJAYA-320’ விமானப் போக்குவரத்து துறைமுகத்திற்கு வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI BRAWIJAYA - 320' என்ற போர்க்கப்பல் இன்று (2025 ஆகஸ்ட் 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Frigate MPCS என்ற 'KRI BRAWIJAYA-320' போர்க்கப்பல் 143 மீட்டர் நீளமும் மொத்தம் 165 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் John David Nalasakti கடமையாற்றினார்.

மேலும், இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதுடன், வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, 'KRI BRAWIJAYA-320' 2025 ஆகஸ்ட் 30, அன்று இலங்கையை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது.