Pacific Angel – 2025 பயிற்சிக்காக கடற்படை இணைகிறது
பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை விமானப்படை; அமெரிக்க பசிபிக் படை, ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை, ஜப்பான் தற்காப்பு விமானப்படை, மாலத்தீவு தேசிய காவல்படை, பங்களாதேஷ் விமானப்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Pacific Angel - 2025 உடன் இணைந்து, இலங்கை கடற்படை 2025 செப்டம்பர் 09, அன்று மாரவில கடல் பகுதியில் நடைபெற்ற தேடல் மற்றும் மீட்பு திறந்த நீர் நடவடிக்கையில் (Search and Rescue Open Water Operation) பங்கேற்றது.
அதன்படி, அமெரிக்க பசிபிக் விமானப்படையின் USAF C-130 மற்றும் இலங்கை விமானப்படையின் பெல் 412 விமானம் இணைந்து நடத்திய Swift Water Recovery Operation பயிற்சியில் இலங்கை கடற்படையின் விரைவு பதில் மற்றும் மீட்புப் பிரிவின் (4RU) உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஒரு (01) விரைவுத் தாக்குதல் படகு, மூன்று (03) Combat Rubber Raiding Craft படகுகள் மற்றும் உயிர்காக்கும் மாலுமிகள் திறந்த கடல் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியில் பங்கேற்றனர்.
மேலும், இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், திறந்த கடலில் ஏற்படும் அவசரநிலைகளின் போது, உயிர் இழப்பைக் குறைத்து, விரைவாகவும் கூட்டாகவும் பதிலளிக்கும் திறனை வளர்ப்பதற்கான வாய்ப்பானது கிடைக்கும்.