மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதில் கடற்படை மற்றும் யாழ்ப்பாண மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன

வடக்கு மாகாணத்தில் மீன்வளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி, இலங்கை கடலோர காவல்படைத் துறை மற்றும் வடக்கு மாகாண மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில், கட்டளைத் தலைமையகத்தில் 2025 செப்டம்பர் 09 ஆம் திகதி அன்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, உள்ளூர் மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், ஒழுங்குமுறை அம்சங்கள், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள், கடத்தல் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்க நிலையான மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், பாதுகாப்பான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட மீன்பிடி சூழலை உறுதி செய்வதற்கு கடற்படை, கடலோர காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் மீன்பிடி சங்கங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், யாழ்ப்பாண துணை மீன்வள இயக்குநர் மற்றும் மீன்வள ஆய்வாளர்கள் மற்றும் மீன்வள சங்கங்களின் தலைவர்கள் உட்பட வட மாகாணத்தில் உள்ள மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றது.