'கலா வாவியை யானைகளிடம் திருப்பிக் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளின் கீழ் க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ், 'யானைகளுக்கு கலா வாவியை திருப்பித் கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில் கலகம மற்றும் பலலுவெவ பகுதிகளில் 2025 செப்டம்பர் 05 முதல் 07 வரை மேற்கொள்ளப்பட்ட கலா வாவியை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு கடற்படையின் சமூக பங்களிப்பு வழங்கப்பட்டது. கலா வாவியில் இருந்து ஆகாயத்தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றி காட்டு யானைகளின் உணவுத் தேவைகளுக்காக புல் வளர ஏற்ற சூழலை உருவாக்க, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கடற்படையானது தனது பங்களிப்பை வழங்கியது.

அதன்படி, மூன்று (03) நாள் கலா வாவி சுத்திகரிப்பு திட்டம் க்ளீன் ஶ்ரீ லங்கா செயலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகம், முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை, இலங்கை மகாவலி ஆணையம், வனவிலங்குத் திணைக்களம், சுற்றுச்சூழல் நட்பு தன்னார்வ அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட ஏராளமானோரின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.