கொட்டுகச்சி குளத்தின் செயலிழந்த மதகை பழுதுபார்க்க கடற்படை சுழியோடிகளின் பங்களிப்பு

ஆனமடுவவில் உள்ள கொட்டுகச்சி குளத்தின் செயல்படாத மதகை பழுதுபார்த்து மீட்டெடுக்க கடற்படை 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி அன்று சுழியோடல் நடவடிக்கைகளின் மூலம் கடற்படை தனது உதவியை வழங்கியது.

கொட்டுகச்சி குளத்தின் மதகை ஆய்வு செய்து தேவையான பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்கு புத்தளம் நீர்ப்பாசனத் துறை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கடற்படையிடம் சுழியோடி உதவியை கோரியுள்ளன. அந்தக் கோரிக்கைக்கு கடற்படை உடனடியாக பதிலளித்து, இதற்காக வடமேற்கு கடற்படை கட்டளையிலிருந்து சுழியோடி குழுவை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, கடற்படை சுழியோடி குழு, மதகு வாயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மணல், சேறு மற்றும் பாறைகளை அகற்றி அதன் செயல்பாட்டை மீட்டெடுக்க அயராது உழைத்தது.