கடற்படை தலைமையகத்தில் "கைவினைஞர் தினம்" கொண்டாடப்பட்டது
இலங்கை கடற்படையின் தொழில்நுட்பத் துறையில் மாலுமிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் (Artificers’ Day) நிகழ்ச்சி, 2025 செப்டம்பர் 10 ஆம் திகதி அன்று கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன்படி, கைவினைஞர் தினத்தை முன்னிட்டு மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஒருவரால் அர்த்தமுள்ள சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில், கடற்படையின் தொழில்நுட்பத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்நுட்பத் துறையில் மாலுமிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பொறியியல் பணிகளுக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட முக்கியமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.