இலங்கை தன்னார்வ கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் 2025 தொடங்கியது
இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்த பயிற்சி முகாமின் தொடக்க விழா, தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி கமாண்டர் அனுர கருணாரத்னவின் அழைப்பின் பேரில், தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேராவின் தலைமையில், வெலிசறை தன்னார்வ கடற்படைத் தலைமையகத்தில் 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது.
தன்னார்வ கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் தொழில்முறை திறன்கள் மற்றும் அறிவை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் பயிற்சி முகாமில் இந்த (2025) ஆண்டு, 50 அதிகாரிகள் மற்றும் 493 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் உட்பட 543 தன்னார்வ கடற்படை வீரர்கள் பங்கேற்பார்கள்.
இந்த வருடாந்திர பயிற்சி முகாம் 2025 அக்டோபர் 02 ஆம் திகதி வரை நடைபெறுவதுடன், மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் மேற்கொள்ளப்படும் தன்னார்வ கடற்படையின் ஆய்வு மற்றும் மரியாதை அணிவகுப்புக்குப் பிறகு வருடாந்த பயிற்சி முகாமானது நிறைவடையவுள்ளது.
மேலும், இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கமாண்டர் தெலங்க சந்திரசேன உள்ளிட்ட தன்னார்வ கடற்படை தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவனத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், வருடாந்த பயிற்சி முகாமில் பங்கேற்கும் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியில் உள்ள சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.