இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA ’ கப்பல் விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ இன்று (2025 செப்டெம்பர் 20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

தீவை வந்தடைந்துள்ள Frigate வகைக்குரிய ‘INS SATPURA’ என்ற கப்பல் 142.5 மீட்டர் நீளம் கொண்டதுடன், 403 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் Vikas Garg கடமையாற்றுகின்றார்.

மேலும், ‘INS SATPURA’ கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் அங்கத்துவ குழுவினர்கள் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.