இந்திய கடற்படைத் தளபதி இலங்கை கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2025 செப்டம்பர் 21 அன்று இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி (Admiral Dinesh K Tripathi) , இன்று (2025 செப்டம்பர் 22) காலை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
அதன்படி, நான்கு நாள் (04) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைத் தளபதி மற்றும் அவரது மனைவியை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன அன்புடன் வரவேற்றார்.
இன்று (2025 செப்டம்பர் 22) காலை கடற்படைத் தலைமையகத்திற்குள் நுழைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு கடற்படையின் சம்பிரதாய மரியாதையை வழங்கிய பிறகு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இந்திய கடற்படைத் தளபதியை கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார்.
கடற்படைத் தலைமையகத்தில் இந்திய கடற்படைத் தளபதிக்கும் இலங்கை கடற்படைத் தளபதிக்கும் இடையிலான இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால நட்பை வளர்ப்பது போன்ற இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்திற்கு இரு நாடுகளின் கடற்படைத் தலைவர்களும் சிறப்பு கவனம் செலுத்தினர், மேலும் உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.
மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளதுடன், மேலும் இலங்கை கடற்படையால் 12 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு - 2025 இல் பங்கேற்ற பிறகு, 2025 செப்டம்பர் 25, அன்று தீவை விட்டுப் புறப்பட உள்ளார்.