மாறிவரும் இயக்கவியலுக்கு முகங்கொடுக்கும் வகையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் கொள்கை குறித்த 12வது காலி உரையாடலில் பயனுள்ள மற்றும் அறிவார்ந்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நடைபெற்றன
இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து பன்னிரண்டாவது (12வது) ஆண்டாக ஏற்பாடு செய்த காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு, 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி வெலிசரவில் உள்ள Wave n' Lake மண்டபத்தில், இலங்கை உட்பட 37 நாடுகள் மற்றும் 16 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த கடல்சார் பங்குதாரர்கள், பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்களின் பங்கேற்புடன் தொடங்கியது ‘Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics’ என்ற கருப்பொருளில் தொடக்க அமர்வு உட்பட மூன்று அமர்வுகளின் கீழ் நடைபெற்ற கலந்துரையாடலின் பிறகு மாநாட்டின் முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அதன்படி, இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளைப் பொறுத்தவரை; இது ஐந்து (05) முக்கிய துணை கருப்பொருள்களை உள்ளடக்கியது: கடல் சுற்றுச்சூழல், கடல்சார் நிர்வாகம், கடல் பொருளாதாரம், கடல்சார் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பராமரித்தல் என்ற ஐந்து (05) அமர்வுகளில் நடைபெறுகிறது.
‘Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics’ என்ற இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளின் கீழ், பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலபகே (ஓய்வு) தலைமையிலான கலந்துரையாடலின் தொடக்க அமர்வில் கருத்துப் பரிமாற்றம் மற்றும் அறிவுப் பரிமாற்றம் நடைபெற்றது. இந்த அமர்வை பின்வரும் நிபுணர்கள் நடத்தினர்: இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, ( Admiral Dinesh K Tripathi), ரஷ்ய கடற்படையின் துணைத் தளபதி அட்மிரல் Vladimir Vorobyevu (Deputy Commander - in - Chief of the Russian Navy), ரியர் அட்மிரல் Hugues Laine (Joint Force Commander, French Forces in the Indian Ocean) மற்றும் Dr. Huang Yunsong (Deputy Director of the Institute of South Asian Studies and Coordinator of the China centre for South Asian Studies at Sichuan University) ஆகியோரினால் நடத்தப்பட்டது.