12வது காலி உரையாடலின் இரண்டாவது அமர்வின் போது, மாறிவரும் இயக்கவியலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நிர்வாகம் குறித்த நிபுணத்துவ கலந்துரையாடல்

2025 செப்டம்பர் 24, அன்று நடைபெற்ற காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் இரண்டாவது அமர்வின் போது, பேராசிரியர் Quentin Hanich அவர்களால் (Maritime Governance Under Changing Dynamics) என்ற கருப்பொருளில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

அதன்படி, இந்த ஆண்டு காலி உரையாடலின் கருப்பொருளுக்கு இணங்க, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சட்ட நடைமுறையை மேம்படுத்துவதற்காக; சட்டவிரோத, ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் அறிக்கையிடப்படாத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பது, கடலில் கடற்கொள்ளையர் மற்றும் ஆயுதக் கொள்ளையிலிருந்து கப்பல்களுக்கு ஏற்படும் சவால்கள், கடல்சார் நிர்வாகம் தொடர்பான சட்ட கட்டமைப்பு மற்றும் கடல்சார் நிர்வாகம் தொடர்பான மாறிவரும் மூலோபாய சூழல் குறித்து பரந்த அளவிலான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

பேராசிரியர் Quentin Hanich (Fisheries Governance Program Leader, Australian National Centre for Ocean Resources and Security – ANCORS) இன் தலைமையில் ‘Maritime Governance Under Changing Dynamics’ என்ற தலைப்பின் கீழ் நடைப்பெற்ற இரண்டாவது அமர்வில், Responding to IUU Fishing in the Indian Ocean: Sustainable practices and Marine environmental stewardship amid shifting Geopolitical and climate dynamics என்ற தலைப்புகளில் Dr. Rafael Prado (Nippon foundation lecturer on global ocean governance, IMO international maritime law institute -IMLI) இனாலும் Harnessing emerging technologies to combat piracy and armed robbery against ships என்ற தலைப்பில் Vijay D Chafekar [Executive Director, Re CAAP ISC & Former A/DG of ICG (Retd.)] உம் Disparities in National Laws and Law Enforcement Mechanisms Creating Inconsistencies in Response Mechanisms என்ற தலைப்பில் திரு. விகும் டி அப்ரூ (Deputy Solicitor General & President’s Counsel, AG Department- SL) இனாலும் The Dynamic Strategic Environment in the Indian Ocean and Partnering to Deter என்ற தலைப்பில், மேஜர் ஜெனரல் Suzanne Puanani Vares-Lum (Retd.) [Director, Asia-Pacific Centre for Security Studies (APCSS)] இனால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், கலந்துரையாடலை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் அமர்வின் போது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் மற்றும் பிராந்தியத்தைப் பயன்படுத்தும் கடல்சார் தரப்பினர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்த கூடுதல் விளக்கங்கள் வழங்கப்பட்டன.