இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SATPURA ’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான ‘INS SATPURA’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்து 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

இந்த விஜயத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் உத்தியோகப்பூர்வ சந்திப்பானது அக் கட்டளை தலைமையகத்தில் நடைப்பெற்றதுடன், ‘INS SATPURA’ போர்க்கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதிலும் பங்கேற்றனர்.