மாறிவரும் இயக்கவியலுக்கு மத்தியில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பொருளாதாரம் குறித்து 12 வது காலி உரையாடலில் கலந்துரையாடப்பட்டது
2025 செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் மூன்றாவது அமர்வின் போது, (Maritime Economy Under Changing Dynamics) என்ற கருப்பொருளின் கீழ் பிராந்திய நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பயனர்களின் கடல்சார் பொருளாதார செழிப்புக்கான முக்கியமான விடயங்கள், கலாநிதி கணேசன் விக்னராஜா (Ganeshan Wignaraja) தலைமையில், கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, இந்தியப் பெருங்கடலில் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகளில் கடல்சார் பாதுகாப்புப் படைகளின் பங்கு, வாய்ப்புகள், சவால்கள் மற்றும் அபாயங்கள் மற்றும் அதை ஒட்டி கட்டமைக்கப்படும் பொருளாதாரத்தின் செழிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கலாநிதி கணேசன் விக்னராஜா (Ganeshan Wignaraja - Visiting Senior Fellow at ODI Global in London and Former Executive Director of the Think Tank, Ministry of Foreign Affairs, Sri Lanka) இன் தலைமையில் ‘Maritime Economy Under Changing Dynamics’ கருப்பொருளின் கீழ், மூன்றாவது அமர்வின் போது, Role of a Maritime Force in a Prospering Blue Economy என்ற தலைப்பில் Col Amanda Jhonston (DA Australia in New Delhi) இனாலும் Maritime Economy under Changing Dynamics: Resilience of the Society and Role of Maritime Forces என்ற ஆய்வறிக்கை மூலம், Maj Gen Rob de Wit (Deputy CNS, Royal Netherlands Navy) இனாலும் Opportunities, Challenges, and Maritime Risk Management in the Blue Economy என்ற ஆய்வறிக்கை மூலம் , Cmde Ben Aldous RN (Deputy Commander, CMF) இனால் இவ் அமர்வினுள் இந்தியப் பெருங்கடலில் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.