இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் எல்லை சேவைகள் முகமையின் பிராந்திய இயக்குநர், கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கையில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் எல்லை சேவைகள் முகமையின் பிராந்திய இயக்குநர் Joshua Newby கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 செப்டம்பர் 23 அன்று கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படைத் தளபதிக்கும் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் பிராந்திய இயக்குநருக்கும் இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஒரு சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.