ராகம புகையிரத நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு
இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்திர பயிற்சி முகாமுடன் இணைந்து, 'க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்தின் கீழ் ராகம புகையிரத நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்வதற்கான சமூக பங்களிப்பானது 2025 செப்டம்பர் 22, அன்று நடைபெற்றது.
அதன்படி, இலங்கை தன்னார்வ கடற்படை வருடாந்திர பயிற்சி முகாம் 2025 இல் பங்கேற்கும் கடற்படை வீரர்களால் ஜா-எல பிரதேச சபை மற்றும் ராகம புகையிரத நிலைய அதிபருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்புரவுத் திட்டத்தினால், ராகம புகையிரத நிலையத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டது.