12வது காலி உரையாடலில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளால் பிராந்திய கடல்சார் ஒத்துழைப்புக்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது
12வது காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டுடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு கடற்படைத் தலைவர்கள் உட்பட கடல்சார் பங்குதாரர்களுடன் இருதரப்பு உத்தயோகப்பூர்வ சந்திப்புகளை நடத்தினார், மேலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். இந்த நிகழ்வில், பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதில் இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு பிரதிநிதிகள் குறிப்பாகப் பாராட்டினர்.
அதன்படி, மாநாட்டின் தொடக்க நாளில் (2025 செப்டம்பர் 24), கடற்படைத் தளபதி தாய்லாந்து, ஆசிய பசிபிக் பாதுகாப்பு ஆய்வு மையம், நெதர்லாந்து, ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
மேலும், காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் இரண்டாவது நாளில் (2025 செப்டம்பர் 25), கடற்படைத் தளபதி மங்கோலியா, அமெரிக்கா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளையர் மற்றும் ஆயுதக் கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கான பிராந்திய ஒத்துழைப்பு (ReCAAP), ஜப்பான், அமெரிக்க பாதுகாப்பு கட்டுப்பாட்டு நிறுவனம், பிரான்ஸ், இந்தோனேசியா, மியான்மர் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பங்கேற்கும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
மேலும், காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு, பிராந்திய மற்றும் உலகளாவிய கடல்சார் பங்குதாரர்களிடையே மேம்பட்ட ஒத்துழைப்பு, கூட்டாண்மைகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட சர்வதேச உறவுகள் மூலம் கடலோரத்தில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தாயகத்திற்கு பல நன்மைகளைக் கொண்டுவரும்.