தெற்காசிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தனர்

தெற்காசிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (South Asian Sustainability & Security Research Institute - SASSRI) பேராசிரியர் Christian Kaunert உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று 2025 செப்டம்பர் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, தெற்காசிய பிராந்தியத்தில் பொதுவான பாதுகாப்பு சவால்கள் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கடற்படைத் தளபதிக்கும் தெற்காசிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு மூலோபாய அளவிலான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.