ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது

ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கர்னல் Brandon Wood தலைமையிலான ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியைப் பயிலும் மாணவர்கள் குழு, 2025 அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சற்திப்பிற்காக சந்தித்தனர்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Amanda Johnston கலந்து கொண்டார், மேலும் கடற்படைத் தளபதிக்கும் ஆஸ்திரேலிய தூதுக்குழுவிற்கும் இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

மேலும், இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.