இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறுகின்றது
NAVSTRAT-2030 இரசாயணவியல் திட்டத்திற்கு இணங்க உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு திட்டம், ‘Developing Capabilities of CBRN First Response,” என்ற கருப்பொருளின் கீழ் கடற்படை பொறியியல் துறை 2025 அக்டோபர் 22 முதல் 23 வரை கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.
இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபை (SLAERC), இலங்கை சுங்கம், இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு பிரிவின் நிபுணர்கள் குழுவால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன், மேலும் 44 கடற்படை வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான கடமைகளில் ஈடுபடும் கடற்படை வீரர்களுக்கு கல்வி கற்பித்தல், தொழில்முறை திறன் மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துதல் மற்றும் அவசரகால சூழ்நிலைகளை நிர்வகிப்பதிலும் பதிலளிப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடற்படையின் நோக்கமாகும்














