கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளை மேற்கொண்ட மரம் நடும் திட்டம்

2025 டிசம்பர் 09 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட தீவு முழுவதும் மரம் நடும் திட்டத்தின் கீழ் தெற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் மரம் நடும் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலின் நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் பல்வேறு வகையான தாவரங்கள் தெற்கு கடற்படை கட்டளையின் கடலோர, குளம் மற்றும் நிலப் பகுதிகளை உள்ளடக்கி நடப்பட்டன.

மேலும், தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.