‘AKEBONO’ கப்பல் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன் குழுவினர், இன்று (2025 அக்டோபர் 29,) காலை காலி முகத்திடலில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ், "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் சமூக சேவை திட்டத்திற்கு இலங்கை கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகிறது.

அதன்படி, இலங்கை கடற்படையுடன் இணைந்து ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப் படையின் 'AKEBONO' கப்பலின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தின் மூலம், காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள கடற்கரையில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உள்ளிட்ட பெரிய அளவிலான திடக்கழிவுகள் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு, கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அப்புறப்படுத்தப்பட்டன.

மேலும், இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கமாண்டர் Takayuki Kubo இந்த நிகழ்வில் இணைந்தார்.