மேற்குக் கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளால் இலங்கை-ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்பெற்றது

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, இன்று (2025 அக்டோபர் 31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் மற்றும் கடற்படை விமான நடவடிக்கைகள் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைகள் செலுத்திய பின்னர் பயிற்சி முடிவடைந்தது.

மேலும், இத்தகைய உத்தியோகபூர்வ வருகைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே மேம்பட்ட கடற்படை ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை பெரிதும் எளிதாக்கும், மேலும் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு பதிலளிப்பதற்கான ஒரு கூட்டு அணுகுமுறையையும் எளிதாக்கும்.