விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவுக்கு வந்த 'PNS SAIF' என்ற போர்க்கப்பல் தீவை விட்டு புறப்பட்டது

2025 நவம்பர் 18 ஆம் திகதி விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பலான ‘PNS SAIF’, இன்று காலை (2025 நவம்பர் 19) தீவை விட்டு புறப்பட்டதுடன். கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை அளித்தனர்.

Frigate (FFG) வகைக்குரிய ‘PNS SAIF’ என்ற போர் கப்பல் 123 மீட்டர் நீளம் கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக CAPTAIN ASFAND FARHAN KHAN கடமையாற்றுகின்றார். இந்த கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில் கப்பலின் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்பில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களையும் பார்வையிட்டனர்.