மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர், கடற்படை தலைமை அதிகாரியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கையில் உத்தியோகப்பூர்வ சந்திப்பை மேற்கொண்ட மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர், Ibrahim Hilmy (Chief of Defence Force of Maldives National Defence Force -MNDF), 2025 டிசம்பர் 01, கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை, உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

அதன்படி, மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படைத் தலைவருக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டு, அவர் கடற்படைத் தலைமையகத்திற்கு வரவெற்றதன் பின், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கடற்படை த் தலைமை அதிகாரிக்கும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படைத் தலைவருக்கும் இடையே ஒரு சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.