சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இந்திய போர்க்கப்பல்கள் தீவுக்கு வந்தன

2025 நவம்பர் 28 ஆம் திகதி சர்வதேச கடற்படை ரோந்துக்காக சமீபத்தில் தீவை வந்தடைந்த இந்திய கடற்படையின் INS VIKRANT மற்றும் INS UDAYGIRI போர்க்கப்பல்கள், தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கின.

மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்புடன், இந்திய கடற்படையின் INS SUKANYA போர்க்கப்பல், தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க மற்றொரு பெரிய அளவிலான மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு, 2025 டிசம்பர் 01ஆம் திகதி தீவை வந்தடைந்ததுடன், இந்த நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா மற்றும் அரசு அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.