மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் வழங்குவதில் கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக முழு தீவையும் உள்ளடக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை கடற்படை செயல்படுத்தி வருகின்றது. இதன் கீழ், கடற்படை இன்று (2025 டிசம்பர் 03) மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் பங்களித்தது. இதில் சிலாபம், அத்தனகொட வித்தியாலயம், ஹங்வெல்ல பஹத்கம ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்,கடுவளை அபிநவராமய மற்றும் கடுவெல பேருந்து நிலையம் ஆகியவைற்றை சுத்தம் செய்தல்; கண்டி மற்றும் தலத்துஓயா பிரதேச செயலகங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை பொதி செய்வதில் உதவுதல் மற்றும் நாத்தண்டிய பகுதியில் குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும்.

மேலும், கடற்படை இன்று (2025 டிசம்பர் 03) மீதொடமுல்ல, அனுராதபுரம் மற்றும் ஆராச்சிகட்டுவ ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட கடற்படையின் நடமாடும் சமையலறை வாகனங்கள் (Mobile Kitchen) மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் கண்டியின் தெல்தெனிய பகுதியில் நிறுவப்பட்ட கடற்படையின் நடமாடும் மீள் நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் (Mobile RO Plant) மூலம் சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது.