மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக தீவு முழுவதும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களை வழங்குவதில் கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, முழு நாட்டையும் உள்ளடக்கி கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், கொழும்பு, கம்பஹா, புத்தளம், அனுராதபுரம், மன்னார், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு கடற்படை இன்று (2025 டிசம்பர் 04) பங்களித்தது.

அதன்படி, வெள்ளம் காரணமாக பயன்படுத்த முடியாத குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்யும் பணியின் கீழ், கடற்படை 40 குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்தது. இதில் சிலாபத்தின் மொரதொட பகுதியில் 04 குடிநீர் கிணறுகள், கம்பஹாவின் ஒருதொடாட்டாவில் 10 குடிநீர் கிணறுகள், மன்னார் புனித அந்தோணியார் கல்லூரியில் 01 குடிநீர் கிணறு, அனுராதபுர ஜெயந்திபுரவில் 04 குடிநீர் கிணறுகள், ஹொரொவ்பொத்தான பகுதியில் 08 குடிநீர் கிணறுகள், சங்கிலிகந்தராவ பகுதியில் 08 குடிநீர் கிணறுகள், காகம ஹயே எல பகுதியில் 04 குடிநீர் கிணறுகள் மற்றும் மஹாவிலச்சிய எகே எல பகுதியில் 01 குடிநீர் கிணறு ஆகியவை அடங்கும்.

அத்துடன், கொலன்னாவ, ஒருகொடவத்தை, பூகொட, கடுவெல, பியகம, தொம்பே, சிலாபம், வென்னப்புவ, நாத்தண்டிய மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்ட குழுக்கள் மூலம், கடுவலை மஹா மெவினா அசபுவ, நவகமுவ பிரதான வீதி, பியகம ஸ்ரீ சுனந்தராம விஹாரை, தொம்பே அமிதானந்த அற அறநெறிப் பாடசாலை, வென்னப்புவ தோப்புவ நாத விகாரை மற்றும் வென்னப்புவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றை துப்பரவு செய்யும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.

சாலியபுர உதுருகம, ஹொரவ்பொத்தானை, மெதவச்சிய லித வெவ, இபலோகம காகம, வங்காளை, மன்னார் நகரம் ஆகிய பிரதேசங்களில் பணியமர்த்தப்பட்ட கடற்படைக் குழுக்கள் அனுராதபுரம் வலிசிங்க கல்லூரி, ஸ்வர்ணபாலி பாலிகா வித்தியாலயம், மன்னார் புனித லோரன்ஸ் கல்லூரி, மன்னார், புனித லூசியா கல்லூரி, மன்னார் புனித அந்தோணியார் கல்லூரி, புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் அலுவலகம் ஆகியவற்றை சுத்தம் செய்தல் மற்றும் மன்னார் தேவானாம்பிட்டி பாதையை திருத்துவதிலும் பங்களித்தனர்.

மேலும், திருகோணமலை தெற்கில் உள்ள மூதூர் உதுருகிரி விஹாரையில் கடற்படை மருத்துவக் குழு ஒரு சுகாதார முகாமை நடத்தியது, மேலும் முல்லைத்தீவு நாயாறு களபிற்கு குறுக்கே உள்ள பாலம் உடைந்ததால், கடற்படை இன்று களபிற்கு குறுக்கே பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளையும் வழங்கியது.மேலும், திருகோணமலை தெற்கில் உள்ள மூதூர் உதுருகிரி விஹாரையில் கடற்படை மருத்துவக் குழு ஒரு சுகாதார முகாமை நடத்தியது, மேலும் முல்லைத்தீவு நாயாறு களபிற்கு குறுக்கே உள்ள பாலம் உடைந்ததால், கடற்படை இன்று களபிற்கு குறுக்கே பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளையும் வழங்கியது.