அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான 'DECISIVE' கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாகப் ஏற்றுக்கொண்டது

அமெரிக்காவால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்க கடலோர காவல்படையின் ‘DECISIVE’ கப்பல் (EX USCGC DECISIVE) உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வானது, அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ‘பெல்டிமோர்’ இல் அமைந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்தில் 2025 டிசம்பர் 02, அன்று நடைபெற்றதுடன், மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் பங்கேற்றார். அதன்படி, 2025 டிசம்பர் 02, முதல் P 628 என்ற கொடி எண்ணின் கீழ் இலங்கை கடற்படையில் சேரும் இந்தக் கப்பல், அன்றைய தினம் முதல் அதன் பிரதான கம்பத்தில் இலங்கை தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்றும்.

கடல்சார் பிராந்தியத்தில் பொதுவான சவால்களை சமாளிக்க கூட்டாண்மையை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் அமெரிக்க கடலோர காவல்படை இதற்கு முன் இலங்கை கடற்படைக்கு 'சமுதுர' (P 621), 'கஜபாகு' (P 626) மற்றும் 'விஜயபாகு' (P 627) ஆகிய கப்பல்களை வழங்கியுள்ளதுடன், அந்தக் கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க கடலோர காவல்படை இலங்கை கடற்படைக்கு வழங்கிய நான்காவது கப்பலாக 'DECICIVE', கப்பல் உள்ளடங்கும்.

‘B-Type Reliance Class 210-foot Cutter’ வகுப்பைச் சேர்ந்த இந்தக் கப்பல், 64 மீட்டர் நீளம் கொண்ட ஒரே நேரத்தில் குறைந்தது 6000 கடல் மைல் தூரத்தை உள்ளடக்கிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட மேலும் சுமார் 100 குழுவினருடன் இயங்கக்கூடிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், இந்தக் கப்பல் அமெரிக்க கடலோர காவல்படையின் கீழ் செயல்பட்ட காலகட்டத்தில், அமெரிக்காவின் கடல்சார் மண்டலத்தில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு இது சிறப்பு பங்களிப்பை வழங்கியுள்ளது.

இலங்கையின் நிலப்பரப்பை விட ஏழு மடங்கு பெரிய நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் கடல் வளங்களைப் பாதுகாக்கவும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்திற்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்கவும், இந்தியப் பெருங்கடல் வழியாக கப்பல் பாதைகளுக்கு பாதுகாப்பை வழங்கவும், இதன் மூலம் கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பாக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேசிய கடல்சார் இலட்சியத்தை நனவாக்க, எதிர்காலத்தில் இந்தக் கப்பலை திறம்பட பயன்படுத்த கடற்படை எதிர்பார்க்கிறது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் "பால்டிமோர்" இல் உள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்தில் 2025 டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான 'DECISIVE' ஐ இலங்கை கடற்படையிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைத்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் விழாவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட கலந்துக் கொண்டதுடன், அமெரிக்க கடலோர காவல்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் JAMES L. KNIGHT ( Deputy Chief Acquisition Officer and Director of Domain $ Integration Services U.S. Coast Guard) கலந்துக் கொண்டார்.

மேலும், இந்த நிகழ்வில் Dr. ANDREW BYERS ( Deputy Assistant Secretary of War for South and Southeast Asia ), அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் கௌரவ மஹிந்த சமரசிங்க, P628 இன் நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி கெப்டன் கயான் விக்ரமசூரிய மற்றும் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரிகள் குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.