சீரற்ற காலநிலையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய கடற்படையின் உதவி
சீரற்ற காலநிலையின் காரணமாக சேதமடைந்த சாலைகள் மற்றும் பொது இடங்களை மீட்டெடுப்பதற்காக கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், சேதமடைந்த கண்டி-ஹந்தான சாலை மற்றும் வத்தேகம-ஹாதலே சாலை ஆகியவை இன்று (2025 டிசம்பர் 05,) கடற்படையின் பங்களிப்புடன் சரிசெய்யப்பட்டன.
அதன்படி, சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கனமழை காரணமாக, போக்குவரத்துக்கு இடையூறாக கண்டி-ஹந்தானை சாலையில் சரிந்து விழுந்த மண் மேடுகளை அகற்றுவதற்கு கண்டி பிரதேச செயலகமும், வத்தேகம, பன்வில முதல் ஹாதளே வரை செல்லும் சாலையில் சரிந்து விழுந்த மண் மேடுகளை அகற்றுவதற்கு பன்வில பிரதேச செயலகமும் கடற்படையின் பங்களிப்பை வழங்கின.









