சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், இன்று (2025 டிசம்பர் 06) புத்தளம், அனுராதபுரம், கண்டி, நுவரெலியா, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் பங்களித்தனர்.

அதன்படி இன்று கடற்படையினர் பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் நீர் கிணறுகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் கீழ் ஜா-எல பமுனுவ மத்திய மகா வித்தியாலயம், தேவாலகம பாடசாலை, சிப்பிகலான கல்லூரி, கல்முருவ கிராம சேவை அலுவலகம், ஜா-எல, தொம்பே மற்றும் தன்கொடுவ பிரதேசங்களில் பொது இடங்கள், அனுராதபுரம் கொஹொம்பகஸ் சந்தி, ஹொரவ்பொத்தானை, திரப்பன்கடவல, மஹஇலுப்பல்லம, மஹாவில்கண் தார்பால, மஹாவிலச்சிய, அனுராதபுரம் விவேகராம பாடசாலை, ரபேவ பிரதேச செயலகம், தலைமன்னார் தெவன்பிடி ஆரம்பப் பாடசாலை, நரவிலிக்குளம் பாடசாலை, நானட்டான் பிரதேச வைத்தியசாலை, துள்ளிக்குடியிருப்புப் பாடசாலை மற்றும் தலைமன்னாராம பியர பாடசாலை, மெதவச்சிய ஆகிய பகுதிகளை கடற்படையினர் சுத்தப்படுத்தினர்.

இதேபோல், மன்னார் சர்வ பிம்பராமய, அநுராதபுரம் தெமடவெவ பிரதேசம், இபலோகம கல்நேவ பிரதேசம், மஹவிலச்சிய பொலிஸ் நிலையம், கிழக்கில் மெதவச்சி, மற்றும் பண்டுலகம மாகாண பதிவாளர் அலுவலகம், கொஹொம்பகஸ் சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள நீர் கிணறுகளையும் கடற்படையினர் இன்று சுத்தம் செய்தனர்.

இதேபோல், கண்டியில் உள்ள ஹந்தான மற்றும் ஹாதலே பாதைகளில் சரிந்த மண் மேடுகளஅகற்றுவதற்கும், தெல்தெனிய, துன்ஹின்ன, பன்வில, கம்பளை மற்றும் கெலிஓய பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கும், வத்தேகம பகுதியில் மின்சாரக் கம்பிகளை சரிசெய்வதில் மின்சார வாரியத்திற்கு உதவுவதற்கும், மாதம்பே நெலும்பொகுன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் குழாய்களை அமைப்பதில் நீர் வழங்கல் வாரியத்திற்கு உதவுவதற்கும், புத்தளம் பகுதியில் உள்ள பேராதெனிய ரயில் பாலம் மற்றும் ரயில் பாதைகளை சரிசெய்வதற்கும், முல்லைத்தீவு நாயாறு குளம் வழியாக மக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும், கண்டி மாவட்ட செயலகம் மற்றும் தலத்துஓயா மற்றும் கொத்மலை பிரதேச செயலகங்களுக்கு உலர் உணவு விநியோகிப்பதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதிகளை தயாரிப்பதிலும் உதவுவதற்கும் கடற்படை இன்று கடற்படை குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது.

மேலும், மஹியங்கனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீருக்கடியில் பராமரிப்பு பணிகள் இன்று (2025 டிசம்பர் 06,) கடற்படை சுழியோடியின் உதவியுடன் நிறைவடைந்தன, இதன் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 11,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க முடிந்தது.