இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிப் பெறுவதற்காகவும், வெலிசறை கடற்படை வளாகத்தில் சமய நிகழ்வானது இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிப் பெறுவதற்காகவும் கடற்படைக்கு ஆசீர்வாதம் பெறவதற்காகவும் 2025 டிசம்பர் 09 அன்று வெலிசறை கடற்படை வளாகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களின் பங்கேற்புடன், இரவு முழுவதும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கடற்படையின் பெருமைமிகு 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக கடற்படை பல சர்வமத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. அதன்படி, மீரிகம மினிஒலுவ வித்யாவங்ச மஹாபிரிவெனவின் விஹாராதிபதி இலங்கை ராமண்ண மகா நிகாயவின் மகாநாயக்கர் அக்கமஹா பண்டித அதிபூஜ்ய மகுலேவே விமல மஹாநாயக, ராமண்ண மகா நிகாயத்தின் தலைமை சங்க உறுப்பினர், வெலிசரை முலகந்தகுடி பிரிவேனா மகா விஹாரையின் விஹாராதிபதி, கலைமாமணி வணக்கத்திற்குரிய பண்டித கெரவலப்பிட்டிய சுமேத அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கடற்படைத் தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இந்த இரவு முழுவதும் நடைபெறும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதான நிகழ்வு கடற்படை பௌத்த சங்கத்தின் தலைமையின் கீழ் மற்றும் ஏற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.

இந்த பௌத்த நிகழ்ச்சியைத் தொடங்கி, 2025 டிசம்பர் 06 அன்று மாலை, வெலிசறை கடற்படை போர் வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீர கடற்படை வீரர்களை நினைவுகூரும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டன. பின்னர், மஹாபாகே முலகந்தகுடி விஹாரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சதாதுக கரடுவ மற்றும் பிருவாணா புத்தகங்களை வெலிசறை கடற்படை வளாகத்தில் பிரித் மண்டபத்தில் வைக்கப்பட்டதுடன், அதன் பிறகு இரவு முழுவதும் பிரித் ஓதுதல் தொடங்கியது.

இன்று (2025 டிசம்பர் 07) பிற்பகல், மஹாபாகே முலகந்தகுடி விஹாரையிலிருந்து வந்திருந்த வணக்கத்திற்குரிய 75 மகா சங்கத்தினர்களுக்கு, வெலிசர கடற்படை வளாகத்தில் பௌத்த மத நடைமுறைகளுக்கு இணங்க, தானம் மற்றும் அடபிரிகர வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. அங்கு வந்திருந்த வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான கடற்படை வீரர்களுக்காக பிரார்த்தனை செய்தனர். அதே நேரத்தில், குறிப்பாக தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசி பிராத்திக்கப்பட்டது.

மேலும், கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படைத் துணைத் தலைமை அதிகாரி, விநியோகம் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவருமான ரியர் அட்மிரல் ஜானக மாரம்பே, மேற்கு கடற்படை கட்டளை மற்றும் தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜகத் குமார, கடற்படை கட்டளைகளின் தளபதிகள், கடற்படை இயக்குநர்கள் ஜெனரல்கள், கடற்படை சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கொடி அதிகாரிகள், கடற்படை தலைமையகம், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வெலிசரை கடற்படை வளாகத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந்த பௌத்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.