இலங்கை கடற்படை தனது 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2086 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது
பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு விழா, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகள் உள்ளடக்கப்பட்டு, கடற்படை மரபுகள் மற்றும் மத நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 2025 டிசம்பர் 09 அன்று பெருமையுடன் கொண்டாடப்பட்டது. இதில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் பரிந்துரையின் பேரில், கடற்படையால் 17 அதிகாரிகள் அடுத்த தரத்திற்கும் 2069 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் அடுத்த தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றனர்.



