மனிதாபிமான உதவிகளுடன் நான்கு இந்திய கடற்படைக் கப்பல்கள் தீவை வந்தடைந்தன

தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளுடன் இந்திய கடற்படையின் போர்க்கப்பலான INS GHARIAL மற்றும் மூன்று (03) தரையிறங்கும் கப்பல்கள் 2025 டிசம்பர் 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் தீவை வந்தடைந்தன, மேலும் இலங்கை கடற்படை திருகோணமலை துறைமுகத்திலும் கொழும்பு துறைமுகத்திலும் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பல்களை வரவேற்றது.

அதன்படி, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் ஒருங்கிணைப்புடன், தீவில் நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்க இந்திய கடற்படையின் L-51, L-54 மற்றும் L-57 தரையிறங்கும் கப்பல்களால் கொண்டுவரப்பட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ Santosh Jha, வர்த்தக அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, அரசு அதிகாரிகள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார மற்றும் தரையிறங்கும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், INS GHARIAL போர்க்கப்பல் கொண்டு வந்த மனிதாபிமான உதவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தூதரக அதிகாரிகள், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா மற்றும் INS GHARIAL போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் Gaurav Tewari ஆகியோர் கலந்து கொண்டனர்.