கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எரிபொருள் மிதவையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவை கடற்படையும் கடலோர காவல்படையும் இணைந்து கட்டுப்படுத்தி வருகின்றன
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று (2025 டிசம்பர் 14,) காலை எரிபொருள் மிதவையில் இருந்து தற்செயலாக ஏற்பட்ட கசிவு காரணமாக, கொழும்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி, துறைமுக அதிகாரசபையின் அறிவிப்பின் பேரில், கடற்படை உடனடியாக பதிலளித்து, எரிபொருள் கசிவைக் கட்டுப்படுத்த கடலோர காவல்படையின் ரோந்து கப்பலான சமரக்ஷாவுடன் 03 கடற்படை விரைவுத் தாக்குதல் கப்பல்களை அனுப்பியது. கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன், எரிபொருள் கசிவு வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.










