கடற்படையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வடக்கு கட்டளை கடற்படை மருத்துவமனையில் இரத்த தான திட்டம்
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை நடத்தியதுடன், மேலும் அதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி 2025 டிசம்பர் 06 ஆம் திகதி வடக்கு கட்டளை கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
அதன்படி, இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை இரத்தமாற்ற மையங்களில் இரத்த இருப்புக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான திட்டத்தில் பங்களிக்க வடக்கு கடற்படை கட்டளையின் கப்பல்கள், படகுகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் தன்னார்வத்துடன் முன்வந்தனர்.


