கடற்படை அதிகாரிகள் 25 பேர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் 19வது பணியாளர் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தனர்

சப்புகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பணியாளர் பாடநெறியை முடித்த பத்தொன்பதாவது (19) பாடநெறியின் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்வு 2025 டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு நெலும் பொகுன அரங்கில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட கலந்து கொண்டார்.

2025 ஜனவரி 06 ஆம் திகதி தொடங்கிய பத்தொன்பதாவது (19) பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியில், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 74 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 25 அதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 24 அதிகாரிகள் அடங்குவர். மேலும்; இந்தியா, ருவண்டா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சம்பியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, மாலைத்தீவுகள், நேபாளம், சீனா மற்றும் ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 26 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 149 அதிகாரிகள், 14 இராணுவ அதிகாரிகள், 04 கடற்படை அதிகாரிகள் மற்றும் 08 விமானப்படை அதிகாரிகள் ஆகியோர் 19வது கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியில் சேர்க்கப்பட்டனர்.

அதன்படி, பணியாளர் பாடநெறியை வெற்றிகரமாக முடித்து பணியாளர் தகுதி பெற்ற (Passed Staff College - psc) 25 கடற்படை அதிகாரிகள் நிகழ்வில் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதுடன், கமாண்டர் (அவி) மஞ்சுள ஹேவாசிங்க Golden Owl விருதையும், தளபதி கௌரவ விருதையும் பெற்ற, அதே நேரத்தில் பாடநெறியில் சிறந்த ஆராய்ச்சி அறிக்கைக்கான Golden Pen விருதை லெப்டினன்ட் கமாண்டர் (வ) கபில பண்டார பெற்றார்.

மேலும், இந்த நிகழ்வில் இராஜதந்திர அதிகாரிகள், பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகு, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் சாந்த ஹேவகே, ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார (ஓய்வு), முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் 19 வது பணியாளர் பாடநெறியின் அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் குழு கலந்து கொண்டனர். அவர்கள் பங்கேற்றனர்.