கெட்டம்பே தியகபனாதொட்ட மற்றும் லேவெல்ல பாலங்களில் உள்ள தடைகளை அகற்ற கடற்படை சுழியோடியின் உதவி

பேராதனை, கெட்டம்பே, தியகபனாதொட்ட மற்றும் லேவெல்ல பாலங்களில் சிக்கி, அந்தப் பாலங்கள் வழியாக நீர் ஒழுங்காக வெளியேறுவதைத் தடுத்து, கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர் மட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய மரக்கட்டைகள் மற்றும் விறகுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்ற கடற்படை 2025 டிசம்பர் 19 அன்று சுழியோடியின் உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்கியது.

அதன்படி, சாலை மேம்பாட்டு அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சுழியோடியின் உதவி நடவடிக்கையின் மூலம், கெட்டம்பேயில் உள்ள தியகபனாதொட்ட மற்றும் லேவெல்ல பாலங்களில் சிக்கியிருந்த, நீர் ஒழுங்கான வடிகாலுக்கு இடையூறாக இருந்த மரக்கட்டைகள் மற்றும் மூங்கில் புதர்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சீரற்ற் வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க பொது இடங்கள், வீடுகள் மற்றும் குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்வதற்காக கடற்படையால் தொடங்கப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், இதுவரை (2025 டிசம்பர் 20) கடற்படையின் பங்களிப்புடன் 1111 குடிநீர் கிணறுகள், 108 பொது இடங்கள் மற்றும் 83 வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன, மேலும் கடற்படை தொடர்ந்து இதற்கு பங்களித்து வருகிறது.