இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விஹாரையில் விசேட மத நிகழ்வு

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்தது. இதன் கீழ், கடற்படையிற்கும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆசிர்வாதம் பெறுவதற்காக 2025 டிசம்பர் 27 ஆம் திகதி கடற்படைத் தளபதியின் தலைமையில் களனி ராஜமஹா விஹாரையில் ஒரு சிறப்பு மத நிகழ்வு நடைபெற்றது.

அதன்படி, கடற்படைத் தளபதி முதலில் களனி ராஜமகா விஹாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்கரக்கித தேரரை சந்தித்து ஆசி பெற்றார். இந்த சிறப்பு செத்பிரித் சஜ்ஜாயனா நிகழ்ச்சி களனி ராஜமகா விஹாரையின் தாது மந்திரவில் நடைபெற்றது. அதன் பிறகு, வருகைத் தந்திருந்த வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க கடற்படைப் போர் வீரர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆசிர்வாதம் பெறும் வகையில் தம்ம பிரசங்கங்களை வழங்கினர்.

மேலும், கடற்படைத் தலைமை அதிகாரி, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், உள்ளிட்ட கடற்படை இயக்குநர் ஜெனரல்கள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, கொடி அதிகாரிகள், கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் ஆகியோர் இந்த சிறப்பு மத நிகழ்வில் பங்கேற்றனர்.