பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கடற்படை 04 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்பினாலும் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவிலும், குருநாகல் மாவட்டத்தின் அபன்பொல, கல்கமுவ மற்றும் பிங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிறுவப்பட்ட நான்கு (04) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் மக்களுக்காக கையளிக்கப்பட்டது.

அதன்படி, குருநாகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சர் ஹென்றி ஓல்காட் கனிஷ்ட வித்தியாலய வளாகத்திலும், கல்கமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குருந்தன்குளம் கிராமத்திலும், பிங்கிரிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மனெலெம்புவ ஸ்ரீ சாரணந்தா மகா வித்யாலய வளாகத்திலும் நிறுவப்பட்ட (03) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பதுளை மாவட்டத்தில் உள்ள மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெல்தெனிய தொடக்கப்பள்ளியில் நிறுவப்பட்ட ஒரு (01) நீர் சுத்திகரிப்பு நிலையமும் இவ்வாறு மக்களுக்காக கையளிக்கப்பட்டன.

மேலும், கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் 1145 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டுள்ளன, மேலும் “நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள்” என்ற அரச சுகாதார தொலைநோக்கை அடைவதற்காக இலங்கை கடற்படை இந்த சமூக சேவைக்கு தொடர்ந்து பங்களிக்கும்.