தித்வா புயலால் சிவனொளிபாதமலைக்குச் செல்லும் சாலையை சீர்செய்ய கடற்படை உதவியது
'தித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பொருட்டு, தீவு முழுவதும் உள்ள பாலங்கள், பாதைகள், வீடுகள், குடிநீர் கிணறுகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்து பழுதுபார்க்கும் சிறப்பு திட்டத்தை கடற்படை செயல்படுத்தியுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ், 2025 டிசம்பர் 31 அன்று சிவனொளிபாதமலைக்கு செல்லும் வழியில் மகாகிரிதம்ப பகுதியில் சேதமடைந்த படிகளை சரிசெய்ய முப்படைகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கு கடற்படை உதவிகளை வழங்கியது.
நிலவும் பாதகமான வானிலை காரணமாக சிவனொளிபாதமலைக்குச் செல்லும் சாலையில் உள்ள மகாகிரிதம்பய பகுதியில் சேதமடைந்த படிகளை சரிசெய்வதற்காக தேவையான பொருட்களை இலங்கை இராணுவம் நல்லதன்னிய பகுதியிலிருந்து மகாகிரிதம்பயவிற்கு கொண்டு செல்லத் தொடங்கியது. 2025 டிசம்பர் 04 ஆம் திகதி முதல் சிவனொளிபாதமலை பாத யாத்திரை காலம் தொடங்கியதால், சாலையை பழுதுபார்ப்பதற்காக தேவையான பொருட்களை நல்லதன்னியவிலிருந்து மகாகிரிதம்பயவிற்கு அவசரமாக கொண்டு செல்ல பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் முப்படைகளின் ஏராளமான உறுப்பினர்கள் இப் பணிக்கு பணியமர்த்தப்பட்டனர்.
அதன்படி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலம், சிவனொளிபாதமலைக்கு செல்லும் சாலையை பழுதுபார்ப்பதற்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களும் 2025 டிசம்பர் 31 அன்று நல்லதன்னியவிலிருந்து மகாகிரிதம்ப வரை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடிந்த்து.










