துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவியது

அம்பாறையின் பானம பகுதியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தை அன்மித்த குமண சரணாலயத்தில் நடமாடிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க கடற்படை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2026 ஜனவரி 04, அன்று உதவி வழங்கியது.

அதன்படி, அம்பாறையின் பானம பகுதியில் உள்ள குமண சரணாலயத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நடமாடிக்கொண்டிருந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வந்த அம்பாறை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் மருத்துவக் குழுவிற்கு, தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் மஹாநாக நிறுவனத்தின் சேர்ந்த கடற்படைக் குழு உதவியது.

மேலும், இலங்கை கடற்படை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து, வனவிலங்குகள் உட்பட இயற்கை சூழலின் பல்லுயிரியலைப் பாதுகாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.