இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடமிருந்து ஒரு ரிப் படகைப் பெற்றது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய கடற்படையால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரிப் படகு 2026 ஜனவரி 15 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் இலங்கை கடற்படையிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, பதின்மூன்றாவது (13) இந்தியா-இலங்கை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் Srinivas Maddula வின் தலைமையில் இந்த ரிப் படகின் உத்தியோகப்பூர்வ கையளிப்பில், இலங்கை கடற்படை சார்பாக மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுக்களும் பரிமாற்றி கொள்ளப்பட்டது.