2026 தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப்பில் கடற்படை ஏராளமான வெற்றிகளைப் பெற்றது
இலங்கை முய்தாய் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 2026 தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப், 2026 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் விதிவிலக்கான சண்டைத் திறன் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்திய இலங்கை கடற்படை அணி 02 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
தீவின் புகழ்பெற்ற முய்தாய் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் முப்படை விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள், 2026 தேசிய முய்தாய் போட்டியில் பங்கேற்றனர்.
அதன்படி, 75 கிலோ எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை மாலுமி கே.டி.ஏ.டி.பி குமாரவும், 65 கிலோ எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை பெண் மாலுமி ஜே.எஸ் பிரியதர்ஷனியும் தங்கப் பதக்கங்களை வென்றனர். இதற்கிடையில், 80 கிலோ எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கெப்டன் வைஎம்ஆர்எல் செனவிரத்ன, 52 கிலோ எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கெப்டன் எச்கேஎஸ் குமாரி, 57 கிலோ எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கெப்டன் எஸ்விபிஆர் தில்ஹானி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றதுடன், 57 கிலோ எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை மாலுமி டபிள்யூ.டி வீரசிங்க, 85 கிலோ எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை கெப்டன் டபிள்யூ.ட சமீர, 60 கிலோ எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை பெண் மாலுமி பி.எஸ்.டி பதிரண ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.


