“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் காலி மீன்பிடி துறைமுக சுத்திகரிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ், காலி மீன்பிடி துறைமுகத்தில் சுத்தம் செய்யும் திட்டத்திற்கு கடற்படையின் சமூக பங்களிப்பு 2026 ஜனவரி 24 ஆம் திகதி வழங்கப்பட்டது.

"ஒரு வளமான நாடு - ஒரு அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் “க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தை செயல்படுத்த நிறுவப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவில் இலங்கை கடற்படை ஒரு முக்கிய பங்காளியாகும்.

அதன்படி, கடற்படையினர், மற்ற தரப்பினருடன் இணைந்து, காலி மீன்பிடி துறைமுகப் பகுதியில் சட்டவிரோதமாக குவிந்திருந்த குப்பைகளை அகற்றி, துறைமுகப் பகுதியை சுத்தம் செய்வதில் அயராது பாடுபட்டனர்.