இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இந்தியாவின் புது தில்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்துடன் இணைக்கப்பட்ட, இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கெப்டன் Armando Paolo SIMI, 2026 பிப்ரவரி 05, அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படைத் தளபதிக்கும் இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


