இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 262வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 363 பயிற்சி மாலுமிகள் வெளியேறிச் சென்றனர்
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 262 ஆம் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த நிரந்தர கடற்படையின் முந்நூற்று ஐந்து (305) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் ஐம்பத்தெட்டு (58) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று அறுபத்து மூன்று (363) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி காலி, பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர்.
சவாலான தொழிலைத் தேடும் நாட்டின் துடிப்பான இளைஞர்களுக்கு, இலங்கை கடற்படையில் சேர்ந்து பல்வேறு தொழில்முறை துறைகளில் தாய்நாட்டிற்கு சேவை செய்ய கடற்படை ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதில் அதிகபட்ச நன்மைகளைப் பெற்ற 363 மகன்கள் மற்றும் மகள்கள், கடற்படையின் பயிற்சி மாலுமிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான முன்னணி பயிற்சி நிறுவனமான பூஸ்ஸவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் 262 வது பயிற்சியின் கீழ் அடிப்படைப் பயிற்சிக்காக இணைக்கப்பட்டனர்.
இந்தப் வெளியேறிச் செல்லும் அணிவகுப்பின் போது, நிபுன நிறுவனத்தில் நடத்தப்பட்ட தலைமைத்துவ மற்றும் நடைமுறை பயிற்சியின் போது சிறந்த திறன்களை வெளிப்படுத்திய பயிற்சி மாலுமிகளுக்கு பிரதம விருந்தினர் கோப்பைகளை வழங்கினார். அதன்படி, அதன்படி, 262 வது ஆட்சேர்ப்பின் கீழ் வெளியேறிச் செல்லும் முந்நூற்று அறுபத்து மூன்று (363) பயிற்சி மாலுமிகளில், சிறந்த பயிற்சி மாலுமிக்கான வெற்றிக்கிண்ணத்தை பயிற்சி மாலுமி எச்கேஎச்ஐ ஜெயவர்தன பெற்றுக்கொண்டதுடன் அனைத்து பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற பயிற்சி மாலுமிக்கான வெற்றிக்கிண்ணம் பெண் பயிற்சி மாலுமி பிஜிகேஎஸ் கமகேவும் சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை ஐபிபி இலங்கமவும் சிறந்த விளையாட்டு வீராங்கைக்கான கோப்பையை எச்ஏடி தட்சராணியும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான கோப்பையை ஆர்எம்பிஆர்எம் பண்டார மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனைக்கான கோப்பையை பிஎம்சியு த சில்வாவும் பெற்றுக்கொண்டதுடன் 262 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக 'யசோதரா' பிரிவு தெரிவு செய்யப்பட்டது.
வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளுக்கு உரையாற்றிய ரியர் அட்மிரல் ஜகத் குமார, முதலில் வெளியேறும் பயிற்சி மாலுமிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பாக இலங்கை கடற்படைக்கு ஒரு சிறப்பு பொறுப்பு இருப்பதாகவும், தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில்முறை படையாக இலங்கை கடற்படை அதன் செயல்பாடுகள் மூலம் அடைந்துள்ள சுதந்திரத்தை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் பொறுப்பு வெளியேறும் பயிற்சி மாலுமிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதன் மூலம், கடற்படையின் முன்னேற்றத்திற்காக, தாங்கள் பெறும் புதிய அறிவு மற்றும் திறன்களை திறம்பட பயன்படுத்துவதை வெளியேறும் பயிற்சி மாலுமிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், கடற்படை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சவால்களை வெற்றிகரமாக நிர்வகித்து, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, இலங்கை கடற்படைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கடற்படை எதிர்பார்க்கிறது என்றார்.
தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படைக்கு தங்கள் ஆற்றல்மிக்க மற்றும் ஒழுக்கமான மகன்கள் மற்றும் மகள்களை வழங்கிய பயிற்சி மாலுமிகளின் பெற்றோருக்கும், அவர்களின் பயிற்சிக்கு பங்களித்த பயிற்சி ஆலோசகர்களுக்கும் ரியர் அட்மிரல் ஜகத் குமார தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பயிற்சி மாலுமிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி, கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சி, அங்கம் ஹரப நிகழ்ச்சி ஆகிய வண்ணமயமான காட்சிகளுடன் சூரியன் அஸ்தமிக்கும் சம்பிரதாயத்துடன் இந் நிகழ்வு நிறைவடைந்த்து.
மேலும், தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் நீரியல் துறைத் தலைவர் ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள் மற்றும் வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் பெற்றோர்களும் இந்த வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.




