இலங்கை ஆயுதப்படை மருத்துவ மாணவர்களின் 9 வது வருடாந்திர ஆய்வு அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை ஆயுதப்படை மருத்துவ மாணவர்களின் 9 வது வருடாந்திர ஆய்வு அமர்வு 2026 பிப்ரவரி 13 முதல் 15 வரை பத்தரமுல்லையில் உள்ள Water’s Edge ஹோட்டலில் இலங்கை ஆயுதப்படை மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் கடற்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜனக மாரம்பகே ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் ‘Back to Basics: Reinforcing Foundational Readiness in Military Medicine’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை ஆயுதப்படை மருத்துவ மாணவர்களின் 9 வது வருடாந்திர ஆய்வு அமர்வின் தொடக்க உரையை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் ஆலோசகர் மற்றும் மறுசீரமைப்பு பல் மருத்துவப் பேராசிரியர் கொமடோர் (டி) பிரியங்க பலிபான அவர்கள் 2026 பிப்ரவரி 14, அன்று நிகழ்த்தினார். இந்த ஆய்வு அமர்வு புகழ்பெற்ற சர்வதேச பிரதிநிதிகளின் நிபுணத்துவ சொற்பொழிவுகளுடன் இடம்பெற்றது. அதன்படி, All India Institute of Medical Sciences, நிறுவனத்தைச் சேர்ந்த Jyotsna Punj மற்றும் Ravinder Kumar, நளிந்த ஜயவீர (Senior Consultant Physician in Physical Medicine and Rehabilitation at Queen Elizabeth Hospital and Squadron Leader (Specialist Reserve) of the Royal Australian Air Force) உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் கருத்துக்களை வழங்கினர்.
மேலும்,அமர்வின் இரண்டாவது நாளில், ஆலோசகர் அறுவை சிகிச்சை நிபுணர் கெப்டன் கீர்த்தி ராஜபக்ஷ “அறுவை சிகிச்சை நிபுணர் ரியர் அட்மிரல் என்.ஜி. அதுலுகம” நினைவு சொற்பொழிவை நிகழ்த்தினார்.
மேலும் மூன்று நாள் நடைபெற்ற இந்த இலங்கை ஆயுதப்படை மருத்துவ மாணவர்களின் 9 வது வருடாந்திர ஆய்வு அமர்வில் முப்படைகள் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் இராணுவ மருத்துவத்தின் தயார்நிலை மற்றும் செயல்பாட்டு திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் மற்றும் அமர்வுகள் மூலம் துறைசார் அறிவைப் பகிர்ந்து கொண்டனர்.


























