"சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்திற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

“க்லீன் ஶ்ரீ லங்கா” செயலகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட "சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்தின் கீழ், நல்லதன்னியாவிலிருந்து சிவனொளிபாத மலை வரையிலான சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் குப்பைகளை அகற்றும் திட்டத்திற்கு ஆதரவை வழங்க கடற்படை 2026 பிப்ரவரி 19 அன்று நடவடிக்கை எடுத்தது.

“க்லீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் இலங்கையின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நெறிமுறை மாற்றத்திற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னணி பங்காளியாக, இலங்கை கடற்படை அதன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தொடர்ச்சியான சமூக ஆதரவை வழங்கிவருகிறது.

அதன்படி, அரசு நிறுவனங்கள், முப்படைகள், காவல்துறை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், “க்லீன் ஶ்ரீ லங்கா” செயலகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட "சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்தின் கீழ், நல்லதன்னியவிலிருந்து சிவனொளிபாத மலை வரையிலான பாதையில் பக்தர்களால் ஒழுங்கற்ற முறையில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மற்றும் பாலிதீன் உறைகள் உள்ளிட்ட மக்காத கழிவுகளை சேகரித்து, சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அப்புறப்படுத்த கடற்படை பங்களிப்பு செய்தது.