அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி, கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திய்காக 2026 பிப்ரவரி 19 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் Stephen T. Koehler, இன்று (2026 பிப்ரவரி 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
அதன்படி, அட்மிரல் Stephen T. Koehler க்கு பாரம்பரிய கடற்படை மரியாதை அளிக்கப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, கடற்படைத் தளபதிக்கும் அட்மிரல் Stephen T. Koehler க்கும் இடையே கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து மூலோபாய அளவிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான கடல்சார் மண்டலத்தை உறுதி செய்வதற்கான இலங்கை கடற்படையின் பங்கு மற்றும் தயார்நிலை குறித்தும், கடலின் சட்டப்பூர்வ பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவதற்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு குறித்தும் அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதிக்கு விளக்கப்பட்டது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமை அதிகாரி உட்பட கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.














