“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் காலியில் உள்ள கராப்பிட்டிய மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளுக்கு கடற்படை பங்களிப்பு

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்திற்கு இணங்க, கடற்படையினரால் காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவமனையில் 2026 மார்ச் 02 ஆம் திகதி ஒரு துப்புரவு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த திட்டத்தின் மூலம், கடற்படை மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன், கராப்பிட்டிய தேசிய மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த பொலிதீன் மற்றும் காகிதம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் முறையாக அப்புறப்படுத்தினர்.